எதிர்க்கட்சி ஆசனங்களை ஒதுக்குமாறு சு.கவின் 16 பேரும் கோரிக்கை

0
429
16 S L F P parliamentarians recently quit positions Unity Government

(16 S L F P parliamentarians recently quit positions Unity Government)

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி ஆசனங்களை தமக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் குறித்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்றைய தினம் கையளித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்து குறித்த கடிதத்தை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட தரப்பினர் குறித்த கடிதத்தை கையளித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

(16 S L F P parliamentarians recently quit positions Unity Government)

 

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here