Home Sports பிலிஸ்கோவாவிடம் போராடி தோற்றார் விக்டோரியா அஷரெங்கா!

பிலிஸ்கோவாவிடம் போராடி தோற்றார் விக்டோரியா அஷரெங்கா!

0
பிலிஸ்கோவாவிடம் போராடி தோற்றார் விக்டோரியா அஷரெங்கா!

(Madrid Open 2018 Karolina Pliskova news Tamil)

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் செக்குடியரசின் கரோலின் பிலிஸ்கோவா வெற்றிபெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில் பிலிஸ்கோவா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஷரெங்காவை எதிர்த்தாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் பிலிஸ்கோவா போராடி வெற்றிபெற்றார்.

முதல் செட்டில் அபாரமாக ஆடிய பிலிஸ்கோவா 6-2 என முதல் செட்டை கைப்பற்றி, போட்டியில் முன்னிலைப்பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அஷரெங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-1 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதனால் போட்டி 1-1 என்ற செட் கணக்கில் சமனிலையாகி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

தொடர்ந்து இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாட, இறுதிக்கட்டத்தில் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் பிலிஸ்கோவா போட்டியின் வெற்றியை பெற்றுக்கொண்டார்.

<<Tamil News Group websites>>