(tamilnews separate new educational zone pottuvil area)
பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (25) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால வெற்றிடமாக உள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும், பொத்துவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, பொது மைதானம் ஒன்றை அமைத்தல், கல்வியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பொதுச்சந்தை சதுக்கத்தின் நிர்மானங்களை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆளுநர் முன்னிலையில் ஆராயப்பட்டது.
இதன் போது, பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் ஒன்றினை தற்போது உபவலயம் இருக்கும் இடத்திலேயே அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்காக சாதகமான நிலைப்பாட்டை வழங்கிய ஆளுநர், ஜனாதிபதியும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த விடயம் தொடர்பில் தன்னிடம் பல தடவைகள் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தனியான கல்வி வலயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு துரிதகதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், ஆளுநர் உறுதியளித்தார்.
அத்துடன், பொத்துவில் வைத்தியசாலைக்கான சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், அவ்வாறு நியமிக்கும் போது, பொத்துவில் பிரதேசத்திலுள்ள சிற்றூழியர்களையே வைத்தியசாலைக்கு நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன்அலி, பொத்துவில் பிரதேச சபை உறுப்பினகர்ளான என்.எச்.முனாஸ், அன்வர், சதாத் ஆகியோரும், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் உட்பட பொத்துவில் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் எனப் பலர் கலந்துகொண்டனர்.
(tamilnews separate new educational zone pottuvil area)
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மக்களை காப்பாற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த அவலம்
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி