Home More Sri Lanka மரண வீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி !

மரண வீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி !

0
மரண வீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி  !

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின் இன்ஜஸ்ரீ பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (01) மதியம் 1.00 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவிசாவளை பகுதியில் இருந்து டிக்கோயா போடைஸ் தோட்ட பகுதியில் உள்ள மரண வீடு ஒன்றுக்கு வந்தவர்கள் மது அருந்தி விட்டு ஒரே முச்சக்கர வண்டியில் ஆறு பேர் பயணித்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் பயணித்த ஆறு பேரில் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.