சுவிஸ் நாட்டின் தமிழீழ விடுதலை புலிகள் மீதும் அமைப்பின் கட்டமைப்புகளில் ஒன்றான உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்தவர்கள் 13 பேர் மீதும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டு சுவிஸ் நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் இடம்பெற்ற வழக்கானது 2018ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சுதந்திரத்திற்காக போராடும் அமைப்பு என்றும் அவர்கள் எதுவித நிதி மோசடியிலும், தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதனை எதிர்த்து சுவிஸ் அரசினால் மேன்முறையீடு செய்யப்பட்டு அதிலும் தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்தவர்கள் நேர்மையானவர்கள் என நிரூபிக்கப்பட்டது.
இருப்பினும் இருப்பினும் அதன் தலைவர், நிதி பொறுப்பாள மற்றுமோர் அங்கத்தவர் மீது வங்கியின் ஆவண மோசடி சார்ந்து இவர்களுக்கும் தெரிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் மூவருக்கும் 2 வருட நன்நடத்தை பிணையின் அடிப்படை விடுவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதனை எதிர்த்து அமைப்பின் தலைவர் மீள்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஆவண மோசடிகளில் திட்டமிட்டு செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றும் வங்கியின் கவனயீனமே இதற்கு பிரதான காரணம் எனவும் தீர்ப்பு வழங்கியதுடன், அவர் இந்த வழக்கிற்காக செலவு செய்த 1600 சுவிஸ் பிராங்குகளையும், அவரது மன உளைச்சல் மற்றும் ஏனைய காரணங்களுக்கு நஸ்ட ஈடாக 19400 சுவிஸ் பிராங்குகளையும் வழங்கும் படியும் முற்றாக அவர் குற்றமற்றவர் என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளது.
தீர்ப்பு இவ்வாறு வெளிவந்திருப்பினும் இதனை எதிர்த்து சுவிஸ் அரசினால் இந்த தீர்ப்பிற்கு எதிராக 30 நாட்களுக்குள் மீள்முறையீடு செய்யலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனை சுவிஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரஞ்சு மொழி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.