அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் கொலை; பல நகரங்களில் வெடித்த ஆர்ப்பாட்டம்!

0
248

அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் டயர் நிக்கொலஸ் உயிரிழந்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அதனை கண்டித்து பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காரில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரை பொலிஸார் காலால் உதைப்பதையும் அடிப்பதையும் அவர் அலறுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் உயிரிழப்பு; பல நகரங்களில் வெடித்த ஆர்ப்பாட்டம்! | Racism In America Demonstration Erupted

அமெரிக்க பொலிஸ் திணைக்களம் நான்கு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. முதலாவது வீடியோ பொலிஸார் நிக்கொலசை காரிலிருந்து இறங்குமாறு சத்தமிடுவதை காண்பித்துள்ளது.

அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் உயிரிழப்பு; பல நகரங்களில் வெடித்த ஆர்ப்பாட்டம்! | Racism In America Demonstration Erupted

நான் ஒன்றும் செய்யவில்லை வீட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றேன் என அவர் சத்தமிடுகின்றார். அதற்கு பொலிஸார் அவரை நிலத்தில் இருக்குமாறும் கைகளை பின்னால் கட்டுமாறும் சத்தமிடுகின்றார்.

அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் உயிரிழப்பு; பல நகரங்களில் வெடித்த ஆர்ப்பாட்டம்! | Racism In America Demonstration Erupted

பின்னர் பொலிஸார் நிக்கொலசை டேசர் செய்வதையும் அவர் தப்பியோடியதையும் காணமுடிகின்றது. அதேசமயம் இரண்டாவது வீடியோவில் குடியிருப்பு பகுதியொன்றில் அவரை பிடித்த பின்னர் பொலிஸார் மோசமாக தாக்குகின்றனர்.

இந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.