அதிக ஆபத்துள்ள நாணயங்களில் இலங்கை ரூபாவும் உள்ளது!

0
351

உலகில் அதிக ஆபத்துள்ள 07 நாணயங்களில் இலங்கை ரூபாவும் இருப்பதாக ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோமுரா நிதி நிறுவனம் 

நோமுரா நிதி நிறுவனம் என்பது ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியாகும்.

இந்த நிறுவனம் ஆபத்தான நாணயங்களைக் கணக்கிடுவதற்கு ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் வட்டி விகிதங்கள் உள்ளிட்ட 8 காரணிகளை அவர்கள் கவனத்தில் எடுத்துள்ளனர்.

அதேசமயம் எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் நாணய அலகுகள் உலகின் மிகவும் ஆபத்தான கரன்சிகளாக ஏஜென்சியால் பெயரிடப்பட்டுள்ளன.

மேலும் அவை நாணய நெருக்கடி அதிக ஆபத்து இருக்கலாம் என்றும் அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.