ஏழு முறை படுகொலை முயற்சி; நூலிழையில் தப்பிய ரஷ்ய ஜனாதிபதி!

0
387

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதுவரை தமது வழ்க்கையில் 7 முறை படுகொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வாகனம் மீது தற்கொலை தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் புடின் மீதான தாக்குதல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவலை முற்றாக மறுத்துள்ள ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் வெளியான தகவல்கள் இட்டுக்கட்டிய பொய் எனவும் ஜனாதிபதி மீது கொலை முயற்சி நடந்தது உண்மை தான் என தெரிவித்துள்ளது.

இதனிடையே, புடின் பயணித்த வாகனத்தின் முன்பக்கத்தின் இடப்பக்க சக்கரம் பெரும் சத்தமுடன் வெடித்ததாகவும் அதன் பின்னர் கரும்புகை எழுந்ததாகவும் சமூக ஊடகமான டெலிகிராமில் கூறப்பட்டுள்ளது.

அவரது குடியிருப்புக்கு செல்லும் வழியில் சில கிலோ மீற்றர்கள் தொலைவில் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல் பாதுகாப்பு வாகனமானது ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தால் மறிக்கப்பட்டதாகவும் இரண்டாவது பாதுகாப்பு வாகனம் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து வேகமாக தப்பியதாகவும் கூறியுள்ளனர்.

மூன்றாவது வாகனத்தில் சென்றிருந்த புடினின் வாகனத்தின் முன்பக்கத்தின் இடப்பக்க சக்கரம் பெரும் சத்தமுடன் வெடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலானது எப்போது முன்னெடுக்கப்பட்டது, இதன் பின்னணியில் யார் என்பது போன்ற தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

விளாடிமிர் புடின் நீதான தாக்குதல் கொலை முயற்சி என்றால் இது அவர் மீது தொடுக்கப்படும் 7வது தாக்குதல் என கூறப்படுகிறது.