ஒரு கோடி தவறான விடீயோக்களை நீக்கிய YouTube நிறுவனம்!

0
705

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இது வரை கொரோனா குறித்த தவறான மற்றும் அபாயகரமான தகவல்களை வெளியிட்ட 10 லட்சம் வீடியோக்களை நீக்கி உள்ளதாக யுடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூடியூபில் உள்ள லட்சக்கணக்கான வீடியோக்களில் ஒரு சிறிய சதவிகிதம் மட்டுமே இது போன்ற தவறான தகவல்களுடன் பதிவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கொள்கைக்கு எதிரானவை என்பதுடன் கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பும் வீடியோக்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியதால் அவை நீக்கப்பட்டதாகவும் யுடியூப் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன் கூறினார்.

இவை தவிர ஒவ்வொரு காலாண்டிலும், 10 பேர் கூட பார்க்காத சுமார் ஒரு கோடி வீடியோக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

Neal Mohan