300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய ரகசிய தோட்டம்!

0
621

பிரித்தானியாவில் 300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம் ஒன்று வெப்பம் மற்றும் அனல்காற்ற்றின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஆளில்லா வானூர்தி மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளியில் குறித்த மறைந்த தோட்டத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. டெர்பிஷயர் வட்டாரத்திலுள்ள சாட்ஸ்வொர்த் எஸ்டேட் (Chatsworth Estate) எனும் இடத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தோட்டம் காணப்பட்டுள்ளது.

300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம்; மீண்டும் வெளிப்பட்டது! | A Secret Garden Hidden For300 Years Resurfaced

ஐரோப்பியப் பாணியில் வடிவமைக்கப்பட்ட அந்தத் தோட்டம் 1699-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த தோட்டம் டியூக் ஒப் டெவன்ஷயர் (Duke of Devonshire) என்ற உயரிய பட்டம் பெற்றவருக்குச் சொந்தமாக காணப்பட்டதென தெரியவந்துள்ளது.

காலப்போக்கில் அங்கு அடர்ந்து வளர்ந்த புல் தோட்டம் மறைந்து போனதாக தெரிவிக்கப்படும் நிலையில் அக்காலத்தில் இருந்த தோட்டத்தின் வடிவமைப்பைக் குறிக்கும் முக்கியக் கோடுகள் அந்த இடத்தில் மீண்டும் தென்பட்டன.

300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம்; மீண்டும் வெளிப்பட்டது! | A Secret Garden Hidden For300 Years Resurfaced

இந்நிலையில் அது கடந்த காலத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை அந்த தோட்டம் அளித்ததாகத் தோட்டத்தின் மேற்பார்வையாளர் ஸ்டீவ் போர்டர் குறிப்பிட்டுள்ளார்.

300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம்; மீண்டும் வெளிப்பட்டது! | A Secret Garden Hidden For300 Years Resurfaced

தற்போது Chatsworth House Trust charity என்று அறக்கட்டளையின் பொறுப்பில் உள்ள தோட்டம் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. அதேவேளை குறித்த் தோட்டத்தில் அக்கால வடிவமைப்பை மீண்டும் கொண்டு வர விரும்புவதாகப் போர்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.