இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; கலங்கிய தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு

0
60557

இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; கலங்கிய தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு கோட்டா கோ கம போராட்டக்களத்தில், இருந்த கூடாரங்களை இரவோடு இரவாக இராணுவத்தினர் அடித்து நொருக்கியுள்ளதுடன் அங்கிருந்த இளைஞர்களையும் விரட்டியடித்துள்ள நிலையில் தென்னிலங்கையர் ஒருவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கோட்டாகோ கம வில் தாக்கப்பட்ட பெண் ஒருவரது புகைப்படத்தையும் , இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தால் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் ஊடக பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் புகைப்பட்டத்தையும் பகிர்ந்த தென்னிலங்கையர் ஒருவர், இசை உனக்கு எப்படி வலித்திருக்கும் என முகநூலில் வெளியிட்ட பதிவு ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களை மீண்டும் ரணமாக்கியுள்ளது.

ஆம் சிங்கள காடையர்களால் மிக கொடூரமான முறையில் பெண் என்றும் பாராது துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டமையை எந்தவொரு ஈழதமிழராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

அன்று ராஜபக்க்ஷ குடும்ப வெறியர்களால் தமிழ் மக்கள், பெண்கள் , குழந்தைகள் என பாராது கொல்லப்பட்டபோது அவர்களின் அழுகுரல் எந்தவொரு சிங்களரின் செவிகளிற்கும் எட்டவில்லை. ஆனால் இன்று தென்னிலங்கையர்கள் தாக்கப்படுகையில் தமிழ் மக்களின் கண்களில் ஈரம் வருகின்றது.

ஏனெனில் தன் வலியை உணர்ந்தவர்களால் தான் அடுத்தவர்களின் வலியை உணர முடியும். ஒருவேளை இன்று தென்னிலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புறப்பட்டதுபோல , தமிழ் மக்கள் செத்து மடிகையில் , இதேபோல் கிளர்ந்தெழுந்திருதார்களானால் இலங்கையர்கள் எனும் ஒற்றுமை என்றோ மலர்ந்திருக்கும்.

இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | எத்தனையோ உறவுகள் இன்றும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள். இனியேனும் இன மத மொழி பாராது இலங்கையர்கள் என்கின்ற உணர்வு வரட்டும்.