26 வருடங்களாக மகனுக்காக காத்திருந்து உயிரைவிட்ட தாய்

0
620

தனது மகனின் விடுதலைக்காக போராடி 26 வருடங்கள் ஏக்கத்துடன் காத்திருந்த தாயொருவர் மகனை காணாமலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரியே என்பவரே  நேற்றைதினம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மண்ணறைக்குப் போவதற்குள் தன் பிள்ளைக்கு ஒரு பிடி சோறூட்ட வழிகாட்டையா” என நல்லூரானிடம் வேண்டிக்கொண்டிருந்த தாய் இதுவரை தன் பிள்ளையை காணாமலே மறைந்துவிட்டதாக உயிரிழந்தவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் காணமலாக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலையை வேண்டி மற்றுமொரு தாயாருயிரிழந்த சம்பவம் தமிழர் பகுதியில் தொடர் சோகங்களாக பதிவாகி வருகின்றது.