இலங்கையில் சிங்கம் புலிக்கு கூட உணவில்லை!

0
557

தற்போது எதிர்கொள்ளப்படும் உணவு நெருக்கடி நிலைமையில் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பதற்கான வசதிகள் இல்லை என தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிங்கம் புலி போன்ற மாமிச உண்ணிகளுக்கு உணவளிக்க வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இறைச்சிக்கு மாற்று எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

தற்போதைக்கு பொருட்கள் போதுமானதாக இருந்தாலும் மாமிச உண்ணிகளுக்கு உணவளிப்பது எதிர்காலத்தில் பிரச்சினையாக மாறலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விலங்கியல் பாதுகாப்பு நிதியம்

எனவே இறைச்சி வாங்குவதற்கான செலவை விலங்கியல் பாதுகாப்பு நிதியம் வழங்க வேண்டும். அதேவேளை “யாராவது நிதியளிக்கத் தயாராக இருந்தால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

16 ஏக்கர் நிலத்தில் புல், பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து உணவு தேவையை சிபியு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் . தேசிய விலங்கியல் பூங்காக்கள் விலங்குகளுக்கு உணவளிக்க தங்கள் சொந்த உற்பத்தி களை வளர்க்கத் தொடங்கியுள்ளன.

ஹொரண, கோனாபொல பிரதேசத்தில் 16 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு புல், பலா, கித்துல் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படும் எனவும் அவர் கூறினார். விலங்குகளுக்குத் தேவையான உணவைத் தாங்களே வளர்ப்பதைத் தவிர இப்போது வேறு வழியில்லை.

இருப்பினும், தொழிலாளர் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனால் தேவையான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

மேலும் விலங்குகளுக்கு உணவளிக்க இப்பகுதியில் மீன், கால்நடைகள் மற்றும் கோழிகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது, ”என்றும் அவர் குறிப்பிட்டார்.