இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய செய்தி

0
574

ஏற்றுமதி தொழிலுக்கு தேவையான எரிபொருளை நேரடியாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்படும் எரிபொருளின் பெறுமதி டொலரில் செலுத்தப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு 350 நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 40,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 37,500 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் இன்று (14) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.