போராட்ட களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்! அரச செயலகத்திட்கு முன்னால் சடங்குகள்!

0
183

கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் இன்று 6வது நாளாக அமைதியான முறையில் பொதுமக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

‘கோட்டா கோ கம’ என போராட்டக்காரர்களால் பெயரிடப்பட்ட போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றிணைந்து சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.

புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், ஆர்ப்பாட்டக்காரர்களால், அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் ஒரே நேரத்தில் பல சடங்குகள் நடத்தப்பட்டன.

இதேவேளை, அரச தலைவர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்தில் முன்னணி கலைஞர் விக்டர் ரத்நாயக்க இன்று இணைந்துகொண்டுள்ளார்.