‘ரணிலுக்கு இடம் கொடுப்போம்’: மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பம் – மாபெரும் மே தினக் கூட்டத்துக்கும் ஏற்பாடு

0
41

“ரணிலுக்கு இடம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரைக்கு அருகில் இன்று சனிக்கிழமை (27) காலை ஆரம்பமான இந்தப் பேரணி நாட்டின் பல மாவட்களுக்கு பயணிக்கவுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் பேரணி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி இடம்பெவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜேவர்தனவின் வழிகாட்டலின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தேசிய இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களின் பழைய உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி இடம்பெறுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 2024 ஆம் ஆண்டு மே தின விழாவை மருதானையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மருதானையில் ஒரு இலட்சம் பேரின் பங்கேற்புடன் மே தினம் கொண்டாடப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியில் மே தினத்தை ஏற்பாடு செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தலைமையில் லுணுகம்வெஹர பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கடந்த இடம்பெற்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கொண்டாட்டம் தொடர்பாக பிரதேச மட்டத்தில் அமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.