பாட்டு பாடி அசத்திய மோனாலிசா ஓவியம்: இது எப்படி சாத்தியமானது?

0
38

சமீப காலமாக AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நம் அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது எனலாம். அந்த வகையில் அண்மையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ‘VASA – 1’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியானது மனித முகங்களை வாயசைத்துப் பேசுவது போன்ற வீடியோக்களை உருவாக்கி ஆச்சரிப்பட வைக்கிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் ‘அன்னி ஹேத்வேயின்’ என்ற பாடலுக்கு வாயசைத்து பாடுவதைப் போல் குறித்த செயலி வீடியோவொன்றை உருவாக்கியது. குறித்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.