சிங்களவர்களின் பாரம்பரிய உணவான கிரிபத் (කිරිබත්) எனப்படும் பால் சோறு சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ‘MasterChef Australia’ சமையல் போட்டியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா பால் சோற்றை சமைத்து அதன் சுவையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
MasterChef Australia
இந்நிலையில் இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பால் சோற்றை காட்சிப்படுத்திய விதம் மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டுள்ளார்.
அதேவேளை அங்கிருந்த நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என பால் சோறை குறிப்பிட்டுள்ளார். சாவிந்திரி பெரேரா போட்டியில் பால் சோற்றுடன் ஸ்னாப்பர் மீனை வைத்து கித்துல் பாணியை மேலாக ஊற்றி நடுவர்களுக்கு வழங்கினார்.
அதோடு உணவை சுவைத்த நடுவர்கள் ஒரு கொண்டாட்டத்திற்கு ஒப்பிட்டனர். நிஜமாகவே சிறந்த இலங்கை உணவு வழங்கியதற்காக சாவிந்திரியை பாராட்டினார்கள்.