ப்ளு சட்டை மாறனை வெளுத்து வாங்கிய விஜய் ஆண்டனி: தற்போதைக்கு திருந்தி விட்டதாக பதிலடி

0
36

ரோமியோ படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் கடுப்பான விஜய் ஆண்டனி பல நல்ல படங்களை தவறாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் போன்ற அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று கூறியிருந்தார். இதனால், கடுப்பான ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரே அலறும் அளவிற்கு விஜய் ஆண்டனியை வச்சு செய்து வருகிறார்.

விஜய் ஆண்டனியின் இந்த பதிவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்வீட் செய்து இணையத்தையே அலறவிட்டு வருகிறார். முதலில், சினிமா ரசிகர்களே..

தரம் தாழ்ந்த விமர்சகரும், விமர்சன விஷக்கிருமியுமான ப்ளூ சட்டையின் ரோமியோ ரிவியூவை புறக்கணிப்பீர். அலைகடலென திரண்டு ரோமியோ ஓடும் தியேட்டர்களை நிரப்புங்கள். இப்படிக்கு தற்போதைக்கு திருந்திய ப்ளூ சட்டை என பதிவு ஒன்றை போட்டிருந்தார்.