த்ரிஷா திருமணம் செய்யவிருந்த தொழிலதிபர்; பிக்பாஸ் புகழ் நடிகையுடன் டேட்டிங்கா?: கதை அப்படி போகுதா?

0
47

தென்னிந்திய சினிமாவில் இன்றளவும் டொப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அனைத்து முன்னணி ஹரோக்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில் சினிமா வாழ்கையைத் தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் வருண் மனியன் என்ற தொழிலதிபருடன் த்ரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. த்ரிஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதையடுத்து இரசிகர்கள் ஒரே குஷியில் இருந்தனர். ஆனால் திடீரென இருவரும் பிரிந்துவிட்டதோடு திருமணமும் நின்று போனது.

இவ்வாறிருக்க த்ரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் மனியனுடன் நடிகை பிந்துமாதவி தற்போது டேட்டிங் செய்து வருகிறார் என கூறப்பட்டதோடு அதை பிந்துமாதவியும் உறுதிப்படுத்தினார்.

‘த்ரிஷாவுடனான திருமணம் நின்றுபோனதன் பின்பே இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். த்ரிஷாவுடன் உறவில் இருக்கும்போது நாங்கள் டேட் செய்யவில்லை‘ என கூறியுள்ளார் பிந்துமாதவி. இந்த தகவல் கடந்த ஆண்டு வெளியானது என்றாலும் தற்போது அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.