ஹீரோவாக இந்தியன் 2, வில்லனாக கல்கி: ஒரே மாதத்தில் வெளியாகும் கமலின் 2 படங்கள்

0
46

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

இவ்வாறிருக்கும்போது, கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கல்கி 2898 ad’ ஆகிய திரைப்படங்கள் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

‘இந்தியன் 2’ திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளதுடன் அனிருத் இசையமைப்பில் சுமார் ரூபாய் 250 கோடி பட்ஜெட்டில் திரைப்படம் உருவாகியிருக்கிறது.

மேலும் ‘கல்கி 2898 ad’ திரைப்படத்தில் பிரபாசுடன் நடித்துள்ளார் கமல். அதுவும் இதில் வில்லனாக மிரட்டியுள்ளார். சுமார் 600 கோடி செலவில் இத்திரைப்படம் உருவாகி வருகின்றது.

2 வருட இடைவெளியில் கமலின் 2 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளிவருகின்றமை இரண்டு திரைப்படங்களினதும் வசூலைப் பாதிக்கலாம் என்பதால் இரண்டு படங்களும் வெளியாகும் திகதிகளுக்கு இடையில் இரண்டு வார கால இடைவெளி இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.