‘நட்புறவான தந்தை… சிறந்த தலைவர்…’: ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை புகழ்ந்து பாடல் வெளியிட்ட வடகொரியா

0
36

ஆயுபோவேவா… சியுமஹா பபுன்… உன் விவரனி… அபடத் ரஜின் பஹலயதே… என சிங்கள மொழியிலும் நீடூழி வாழ்க… பிரம்ம தேவன்… கொடுத்த வரத்தில்… எமக்கு அரசன் தோன்றியதே… என தமிழ் மொழியிலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்காக உருவாக்கப்பட்ட பாடலை அத்தனை இலகுவில் எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த பாடலை மீண்டும் கண்முன் கொண்டுவந்து சேர்க்கும் வகையில் வட கொரியாவில் பாடலொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை (Kim Jong-un) ‘நட்புறவான தந்தை… சிறந்த தலைவர்…’ என புகழ்ந்து இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரது நிலையை மேம்படுத்துவதற்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தப் பாடல் தோன்றுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடலுக்கான காணொளி அரச கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இதில் குழந்தைகள் முதல் இராணுவத்தினர் வரை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட வடகொரியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், கிம் ஜொங் உன் ஒரு சிறந்த தலைவர் எனவும் நட்புறவான தந்தையால் நாங்கள் பெருமை கொள்கிறோம்’ எனவும் பாடல் வரிகள் அமைந்துள்ளது.

10,000 வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இசைக்குழுவுடன் இணைந்து பாடலின் நேரடி நிகழ்ச்சி அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.