கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ராகவா லோரன்ஸ்: 13 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசளிக்கப்பட்ட பைக்குகள்

0
42

நடன இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட ராகவா லோரன்ஸ். சமூகப் பணிகளிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். நடனத்தில் அதீத திறமைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தனது நடனப் பள்ளியில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்ப கலையில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு பைக் வாங்கித் தருவதாகவும் வீடு கட்டித் தருவதாகவும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த வாக்குறுதியில் ஒன்றை தற்போது நிறைவேற்றியுள்ளார். 13 மாற்றுத் திறனாளிகளுக்கும் பைக்குகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.