ரோகித்துக்காக வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன்: ப்ரீத்தி ஜிந்தா

0
40

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக தற்போது விளையாடி வரும் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொண்டால் அவரை வாங்க எனது வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன் என்று பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

மும்பை அணியின் தலைவராக இருந்த ரோகித் சர்மாவை இந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு குஜராத் அணியில் தலைவராக இருந்தார் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு வாங்கி அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தலைவராக நியமித்தது. எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

ஆனால் இது குறித்து தெளிவான தகவலை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் இருந்தும் அல்லது ரோகித் சர்மா தரப்பிடமிருந்தோ எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

இருப்பினும் அந்த அணியில் வெறும் ஒரு வீரராகவே விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் முழு மனதோடு விளையாடுவதாக தெரியவில்லை.

மும்பை அணிக்காக ஐந்து கிண்ணங்கள் பெற்றுத் தந்த தலைவரை நீக்கியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மும்பை அணி விளையாடும் மைதானங்களுக்கு சென்று ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கரகோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ரோகித் சர்மா நிச்சயம் மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்று மும்பை அணியை போல் இல்லாமல் வேறு அணி அவரை சிறப்பாக கையாண்டால் அந்த அணிக்காக விளையாடுவார் என்று அம்பாத்தி ராயிடு ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

எனவே ரோகித் சர்மா அடுத்த ஆண்டு மும்பை அணிக்காக தொடர மாட்டார் என்றும் தகவல்கள் வெளிவருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக இந்த வருடத்தின் இறுதியில் மெகா ஏலம் நடைபெற உள்ளது.

இதில் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி இந்த ஏலத்தில் கலந்து கொண்டால் அவருக்காக எனது வாழ்க்கையை கூட பந்தயமாக கட்டுவேன் என்று பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை அவர் பொது வெளியில் எங்கும் கூறவில்லை. அணியின் வட்டாரத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் சீசனில் இதுவரை ஒரு கிண்ணத்தைகூட வெல்லாத பஞ்சாப் அணிக்கு ரோகித் சர்மா மாதிரியான ஒரு சிறந்த தலைவர் கிடைத்தால் அந்த அணி சிறப்பான வெற்றிகளை பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மா விலகி ஏலத்தில் கலந்து கொள்வாரா? அவரை பஞ்சாப் அணி எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.