தப்பியோடிய கைதிகள் மீண்டும் கைது

0
44
Hand cuffs on white background. Illustration icon, peerless closed linked police handcuffs. Black and white color.

யாழ். சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டுக் குற்றச்சாட்டிற்காக ஒரு வருட சிறைத்தண்டனை பெற்று வந்த கைதியும், விளக்கமறியல் கைதி ஒருவருமே நேற்று காலை  தப்பியோடினர்.

உடனடியாக செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸார், 30 நிமிடங்களுக்குள் இருவரையும் கைது செய்து மீண்டும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, தப்பியோடிய குற்றத்திற்காக இருவருக்கும் தலா 6 மாத சாதரண சிறைத்தண்டனையும், தலா 1500 ரூபா தண்டப்பணமும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.