இரான் செலுத்திய ஏவுகணைகள், ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது எப்படி?

0
53

இஸ்ரேல் மீது இரான், 170 ட்ரோன்களையும், 30 க்ரூஸ் ஏவுகணைகளையும், 120 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஏவியதாக தகவல்கள் வெளியாகியுளளது. இதில் பெரும்பாலானவை இரானில் இருந்து ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் சிரியா, ஏமன், இராக் ஆகிய நாடுகளில் இருந்து ஏவப்பட்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை தங்கள் இலக்குகளைத் தாக்காதவாறு இடைமறித்து விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் தாக்குதல் குறித்து எச்சரிக்கை அனுப்பப்பட்டு அவை தயார் நிலையில் இருந்துள்ளன. அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய கப்பல் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு, பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன.

அதேபோல சைப்ரஸிலிருந்து பறந்து வந்த ஆர்ஏஎம் டைக்கூன் என்ற போர் விமானம் பல ட்ரோன்களை அழித்தது. ஜோர்டானிலிருந்து வந்த அமெரிக்க ஜெட் விமானங்கள் பல ஏவுகணைகளை அழித்தன.

உலகிலேயே அதிகளவு வான்வெளிப் பாதுகாப்பைக் கொண்ட நாடாக இஸ்ரேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் உலகின் மிகவும் மேம்பட்ட விமானப்படைகளைக் கொண்டுள்ளது. IISS இராணுவ இருப்பு அறிக்கையின்படி, இஸ்ரேலிடம் குறைந்தது 14 ஸ்க்வாட்ரான் ஜெட் விமானங்கள் உள்ளன.