இந்தியா-சீனா எல்லை பிரச்னையை தீர்ப்பது குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?

0
52

இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இ இந்தியா-சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னை குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையான ‘நியூஸ் வீக்’கிற்கு (Newsweek) அளித்த பேட்டியில் பிரதமர் மோதி, எல்லைப் பிரச்னையை சீனாவுடன் பேசி உடனடியாக தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

‘தங்கள் விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்த விரும்பும் நாடுகளுக்கு இந்தியா இயற்கையான தேர்வாகும்,’ என, சீனாவுடனான உறவுகள் குறித்து பிரதமர் மோதி கூறினார்.

இதுதவிர, ஜம்மு காஷ்மீர், பெண்கள், தேர்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற பிரச்னைகள் குறித்தும் பேட்டியில் மோதி பேசினார்.

பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுஇ முன்பை விட பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது. பாஜக தலைவர்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் பரவலாக பிரசாரம் செய்து வருகின்றனர்.