மேடையில் பாடிக்கொண்டிருந்த அனிருத் மீது பொருட்களை வீசிய ரசிகர்கள்!

0
54

தற்போது இளமை தலைமுறையினரை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் அனிருத் . தொடர்ந்து பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஜவான் படத்தின் மூலமாக ஹிந்தியிலும் அனிருத் தற்போது பாப்புலர் தான்.

இசையமைப்பது மட்டுமின்றி அனிருத் உலகம் முழுக்க பயணித்து ரசிகர்களுக்காக கச்சேரிகள் நடத்தி வருகிறார்.

அனிருத் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது ரசிகர்கள் அவர் மீது பொருட்களை தூக்கி வீசி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

அவர் அதை கூலாக எடுத்துக்கொண்டு அந்த பொருட்களை கையால் பிடிக்க முயற்சித்து இருக்கிறார்.

பொருட்களை வீசிய ரசிகர்களின் செயலை நெட்டிசன்கள் தற்போது கண்டித்து வருகின்றனர்.