யாழில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
53

கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் புற்று நோயினால் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டொக்டர் கலாநிதி யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டத்தில் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் புற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்றார்.

புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கும் போது நோயின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும் எனவும் யாழ் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டொக்டர் கலாநிதி யமுனாநந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.