‘கேடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. இந்நிலையில் கடந்த மே 13ஆம் திகதி மைக்கேல் டாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஓகஸ்ட் 01ஆம் திகதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு கோயா பீனிக்ஸ் என பெயரிட்டதை அறிவித்தார். இந்நிலையில் அண்மையில் தனது குழந்தைக்கு 8 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.