IPL போட்டியில் சியர்லீடர்ஸ்க்கு இவ்வளவு சம்பளமா?: நடனத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமை

0
62

‘கிரிக்கெட்’ கால காலமாக பல ரசிகர்களை தனக்கென உரிமைக் கொண்டாடுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கிரிக்கெட்டை ரசித்து பார்த்து வருகின்றனர்.

பல வருட கால நட்பு கூட சில கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பித்தவுடன் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பகையாளிகளாக மாறிவிடுகின்றன.

கிரிக்கெட் என்ற வார்த்தையை கேட்டவுடன் தற்போது எல்லாம் நினைவுக்கு வருவது இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரே. கிரிக்கெட் ஜாம்பவான்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளில் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகின்றனர்.

அவ்வாறிருக்க, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சரமாரியாக அடிக்கப்படும் ஒவ்வொரு பந்துக்கும் , புள்ளிப் பட்டியலில் இணைக்கப்படும் ஒவ்வொரு புள்ளிக்கும் வீரர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக ‘சியர்லீடர்ஸ்’ நடனத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு போட்டியில் நடனத்தில் ஈடுபடுவதற்காக ‘சியர்லீடர்’ கலைஞர் ஒருவருக்கு இந்திய ரூபாயில் 14,000 ரூபாய் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மிகவும் குறைந்த தொகை எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இலங்கை ரூபாயில் இது 50,379 ரூபாய் என மதிப்பிடப்படுகின்றது.

மும்பாய் இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஒரு போட்டிக்காக ‘சியர்லீடர்ஸ்’ கலைஞர் ஒருவருக்கு 20,000 இந்திய ரூபாய் (இலங்கை ரூபாயில் 71,970 ரூபாய்) செலுத்துகிறது. கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24,000 இந்திய ரூபாயை (இலங்கை ரூபாயில் 86,370) செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.