யாழில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடு கட்டும் குடும்பம்; அம்பலத்துக்கு வந்த தகவலால் திகைப்பு!

0
64

யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடு கட்டும் தென்னிலங்கை குடும்பம் ஒன்று தொடர்பிலான தகவல் வெளியாகி பலருக்கும் திகைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கணவன், மனைவி, பிள்ளைகள் என யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தே குறித்த குடும்பம் பிச்சையெடுத்து வீடு கட்டவரும் தகவல் பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நாளொன்றுக்கும் செலவுபோக 30 000 ரூபா கையிருப்பு

யாழ்ப்பாண நகர் பகுதியில் சிறுவர்கள் சிலர் யாசகம் பெற்று வந்த நிலையில் பலர் அந்தப் பிள்ளையளுக்குக் காசைப் போட்டிருக்கினம். இந்நிலையில் நபர் ஒருவர் சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்க பொலிஸார் பிள்ளைகளிடம் நடத்திய விசாரணையில் பெற்றோர்களும் சிக்கியுள்ளனர்.

பெற்ரோர்களை அழைத்து வந்த பொலிஸார், ‘இப்பிடி சின்னப்பிள்ளையளை வைச்சு பிச்சை எடுக்கிறது குற்றம். ஏன் அப்பிடி செய்தனீங்கள்? என கேட்டபோது அவர்கள் கூறிய பதிலால் பொலிஸார் ஆடிப்போயுள்ளனர்.

அதாவது தாங்கள் கொழும்பு வத்தளையில இருப்பதாகவும் அங்கு சொந்தமா வீடு கட்டிக் கொண்டிருக்கிறம். அதுக்குத் தான் இப்பிடிக் குடும்பத்தோட வந்து பிச்சை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

சொகுசு ஹோட்டலில் வாழ்க்கை

தங்கள் செலவு போக ஒரு நாளைக்கு முப்பதாயிரம் ரூபாவுக்கு கிட்டத் தேறும். பத்துப் பதினைஞ்சு நாள் இஞ்ச பிச்சை எடுத்திட்டு, அந்தக் காசைக் கொண்டு போய் வீடு கட்டுற வேலையை பார்பதாகவும், அந்த காசு முடிய மறுபடியும் யாசகம் பெற செல்வதாகவும் அந்த தம்பதிகள் கூறியுள்ளனர்.

அதோடு யாழ்ப்பாணத்தில மட்டுமல்லாது ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு பிரதேசத்திற்கு தாம் பிச்சை எடுக்க செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வீடு கட்டும் கதையை நம்பாத யாழ்ப்பாண பொலிஸார் அது தொடர்பில் வத்தளைப் பொலிசாருக்கு தெரியப்படுத்த அப்பிடி ஒரு வீடு கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது உண்மைதான் என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்களாம்.

யாழ்ப்பாணத்தில உள்ள பெரிய ஹொட்டலில் ரூம் எடுத்து தங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அவனவன் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்க, தென்னிலங்கை குடும்பம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து, கொழும்பில் வீடு கட்டும் சம்பவம் சமூக வலைத்தள வாசிகளை திகைக்க வைத்துள்ளது