யாழில் பொலிஸார் காதில் பூ சுற்றிய மாணவர்கள்!

0
39

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரமாக கார்த்திகைப் பூ அலகரிக்கப்பட்டிருந்தது.

தொடர்பில் விசாரணைக்கு வருமாறு நாளை (31) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில்,

மாணவர்கள் பதிலால் திகைப்பு

நீங்கள் இல்ல அலங்காரம் செய்தது கார்த்திகைப் பூவைத் தானே என வினவியுள்ளனர். அதோடு இதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார்.

பொலிஸாரின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய மாணவர்கள், நீங்கள் கூறுவதைப் போல குறித்த பூ கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதனை நாம் காந்தள் மலர் என அறிந்துள்ளோம்.

அதுமட்டுமல்லாது எமது பாடப்புத்தகத்திலும் அவ்வாறே உள்ளது. இந்நிலையில் வருடத்தில் ஒரு முறை பூக்கும் அரிய மலர் காந்தள் மலர் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காட்சிப்படுத்தினோம் என பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.