ராஜஸ்தான் அணி வெற்றி!

0
77

ஐபிஎல் 2024 ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. 

ஜெய்பூரில் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை பெற்றது.

186 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து  173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன்படி ஐபிஎல் 2024  இன்றைய போட்டியில்  ராஜஸ்தான் அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.