உலகின் மிகப்பெரிய பாம்பு கொல்லப்பட்டது

0
70

உலகின் மிகப்பெரிய பாம்பு என விலங்கியல் வல்லுநர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய 26 அடி நீளமான அனகோண்டா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமேசான் காடுகளின் பழங்குடியினரால் வழிநடத்தப்பட்ட 15 விலங்கியல் வல்லுநர்கள் கொண்ட சர்வதேச குழு, கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் ஆற்றின் துணை நதியில் இந்த மிகப்பெரிய அனகோண்டாவைக் கண்டுபிடித்தது. இந்த பெண் அனகோண்டாவுக்கு ‘அன்னா ஜூலியா’ என்று பெயரிடப்பட்டது.

அனகோண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாக கருதப்படுகின்றன. அனகோண்டாக்கள் மலைப்பாம்பு வகை. அனகோண்டாக்களில், ‘அன்னா ஜூலியா’ மிகப்பெரிய அனகோண்டாவாகக் கருதப்பட்டது. ‘அன்னா ஜூலியா’ என்பது வடக்கு பச்சை அனகோண்டா ஆகும், மேலும் வடக்கு பச்சை அனகோண்டாக்கள் அனகோண்டாவின் புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.