மசாஜ் நிலையம் சென்ற கான்ஸ்டபிள் கைது

0
61
Hand cuffs on white background. Illustration icon, peerless closed linked police handcuffs. Black and white color.

மசாஜ் நிலையமொன்றில் இருந்த பெண் ஒருவரை பலாத்காரமாக கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. அதேவேளை சம்பவம் இடம்பெற்றபோது சந்தேக நபருடன் காணப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சிரிபாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என கூறப்படுகின்றது. பிரதான சந்தேக நபர் இரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.