இனி WhatsApp-ல் Voice Message-ஐ கேட்காமலேயே Text மூலம் படிக்கலாம்- அசத்தல் அப்டேட்

0
120

WhatsApp செயலி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது.

Meta நிறுவனம் WhatsApp அவ்வப்போது புது புது அம்சங்களை கொண்டுவந்து பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்தவகையில், WhatsApp, voice transcription அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அதாவது, Audio Message-களை Text- ஆக படிக்க இந்த அம்சம் பயன்படுத்தப்படும்.

WhatsApp பயனர்கள் transcription-ஐ Unlock செய்ய கூடுதலாக 150MB Data செலவிட வேண்டும்.

Transcription Download செய்யப்பட்டதும், Audio-வை கேட்டாகமலே Text மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp உங்கள் போனில் உள்ள Speech recognition பயன்படுத்தி End-to-end encrypted செய்யப்பட்ட Transcription-களை வழங்குகிறது.

அதோடு பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், Transcription உங்கள் மொபைலிலேயே செய்யப்படும்.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது..