பஸ் விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்

0
78

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.