பெண் பிறப்புறுப்பைச் சிதைப்பதற்கான தடை: காம்பியா நாடாளுமன்றில் விவாதம்

0
83

மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியா (Gambia) நாடாளுமன்றம் பெண் பிறப்புறுப்பைச் சிதைப்பதற்கான தடையை மாற்றும் சட்டமூலம் மீதான விவாதத்தை மேற்கொண்டுள்ளது.

அண்மைக்காலமாக பெண் பிறப்புறுப்பைச் சிதைப்பை தடைசெய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இதன் எதிரொலியாக நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டியிலுருந்து பெண் உறுப்பு சிதைப்பினைச் செய்பவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை பெண் பிறப்புறுப்பைச் சிதைக் காரணமாக பெண்களின் உடலில் பாதிப்பு ஏற்படுவதாகவும், அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதாகவும், சில வேளைகளில் மரணம் ஏற்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.