முன்னாள் காதலியை பார்க்க 3500 கிலோமீட்டர் பயணம் செய்த பிரபல நடிகர்: காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்

0
94

“அவன் இவன்” படத்தின் நடிகர் ஜி.எம். குமார் தனது முன்னாள் காதலியை சந்திக்க 3500 கிலோ மீட்டர் பயணம் செய்த தகவல் இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகின்றது.

காதல் ஒரு மனிதனை என்ன வேண்டுணாலும் செய்ய வைக்கும் என்பதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஒரு காதல் பிரிவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பிரிவிற்கு பின்பாகவும் வெறுக்காமல் நேசிக்க வைக்க அவர்கள் மீதான அன்பு மட்டுமே முக்கிய காரணமாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக திகழும் ஜி.எம். குமார் தன்னுடைய முன்னாள் காதலி மீது வைத்த அன்பு மாறாமல் 3500 கிலோ மீட்டர் பயணம் செய்து அவரை சந்தித்துள்ளார்.

திரையுலகில் இயக்குநராக அறிமுகமான இவர் ஒருக்கட்டத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பு கை கொடுக்காமல் போகவே நடிப்பின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முதன்முதலில் ‘கேப்டன் மகள்’ என்ற படத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை துவங்கினார்.

இதனையடுத்து தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தவர் வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

முன்னாள் காதலியை பார்க்க 3500 கி. மீ பயணம்

தற்போது தனது இணையப்பக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பதிவுகள் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தனது எக்ஸ் தளத்தில் முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூர் வழியாக கோவா சென்று அங்கிருந்து பாம்பே வழியாக மீண்டும் மெட்ராஸ் திரும்பியதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.

மேலும், ஜி.எம். குமார் தற்போது சின்னத்திரையில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தேவைதையை கண்டேன், பூவே உனக்காக, செம்பருந்தி உள்ளிட்ட பல சின்னத்திரை சீரியல்களில் ஜி.எம். குமார் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.