இலங்கை அமைச்சராக இருந்த அகோரி; வைரலாகும் காணொளி!

0
147

டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த கலையரசன் எனும் நபர் தான் இலங்கை அமைச்சராக இருந்தவர் என கூறியுள்ளார்.

தான் இலங்கை அமைச்சராக இருந்ததாக கூறும் அகோரி கலையரசன் சில வருடங்களுக்கு முன்பு டிக் டாக்கில் அதிகமான வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி இருந்தார். 

கொரோனா காலத்தில் தமிழகத்தை சேர்ந்த கலையரசனும் அவருடைய மனைவியும் டிக் டாக் பிரபலங்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர் அகோரியாக மாறியிருக்கும் நிலையில் சமீபத்தில் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் தான் இலங்கையில் அமைச்சராக வேலை பார்த்ததாக கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.