10 கண்ணிமை அறுவை சிகிச்சைகள்; பல எலும்பு ஷேவிங் சிகிச்சைகள்: பிளாஸ்டிக் சர்ஜரிகளால் வந்த பிரச்சினை

0
92

பொதுவாக சினிமாவில் நடிப்பவர்கள்தான் தங்களது முகத்தோற்றம் அழகாக மாற வேண்டும் என்பதற்காக பல்வேறுவிதமான பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து கொள்வார்கள்.

அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த Zhou Chuna என்ற சிறுமி தனக்கு பிடித்த நடிகையைப் போல் மாறவேண்டும் என்பதற்காக 13 வயதிலிருந்தே பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து வந்துள்ளார்.

10 கண்ணிமை அறுவை சிகிச்சைகள், பல எலும்பு ஷேவிங் சிகிச்சைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நடைமுறைகளை தற்போது வரையில் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒட்டுமொத்த சிகிச்சைகளுக்கும் ரூ.4.6 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது. அவரது இந்த அதீத ஆசை பல உடல்நலம் சார்ந்த பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது பள்ளிக்காலம் முழுவதுமே கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கும் தனது தாயுடனும் பிற பள்ளித் தோழிகளுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கித் தவித்துள்ளார்.

இதனாலேயே இந்த ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தியுள்ளார். இந்த வலி மிகுந்த சிகிச்சைகளினால் பல உடல் கோளாறுகளுக்கும் ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அழகு சில வேளைகளில் ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.