நிதி திரட்டும் பணியில் பள்ளி மாணவர்களை நாக்கால் கால்களை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்..!

0
88

மாணவர்களின் கால் விரலை சக மாணவர்கள் சுத்தம் செய்த வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரச்செயல்

அமெரிக்கா, ஒக்லஹோமாவில் உள்ள டீர் கிரீக் பள்ளி கடந்த சில நாட்களாக சமூக சேவைக்கான நிதி திரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் மாணவர்களும் கலந்துகொண்டு பல்வேறு வழிகளில் நிதி சேகரித்து வருகின்றன்னர்.

இந்நிலையில், போட்டி என்ற பெயரில் 9 முதல் 12 வரை உள்ள மாணவர்களின் கால் கட்ட விரலில் வேர்க்கடலை வெண்ணெய் தடவப்பட்டு, அதனை சக மாணவர்கள் தரையில் படுத்தபடி நாக்கால் நக்கி, சாப்பிட வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்த, மற்ற மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி ஊக்கவித்தனர்.

இந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மக்கள் கண்டனம்

இந்த நிகழ்ச்சியில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரம் வரை பணம் திரண்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர். பலர் கண்டணம் எழுப்பினாலும் அதிக பணம் சேர்ந்ததற்காக ஒரு சில பெற்றோர் வரவேற்பும் தெரிவித்து உள்ளனர்.

அருகேயுள்ள காபி கடை ஒன்றில் வேலைக்கு மாற்று திறனாளிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக இந்த நிதி சேகரிக்கும் பணி நடந்துள்ளது.