கொலை குற்றச்சாட்டில் 40 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம்: குற்றமற்றவர் என விடுதலை செய்தது நீதிமன்றம்

0
99

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியவை சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் தண்டனை பெற்று நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில் அவர் குற்றமற்றவர் எனக்கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

பிலடெல்பியாவை சேர்ந்த வில்லியம் பிராங்க்ளின் என்ற நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவரை தண்டனையில் இருந்து விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1980 இல் பிலடெல்பியாவில் பிராங்க்ளின் ஒருவரை கொலை செய்ததாக தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்துள்ள நிலையில் அவரது தண்டனையை நீதிமன்றம் கடந்த புதன்கிழமை இரத்து செய்துள்ளது.

எனினும் அவர் 44 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். ஃபிராங்க்ளின் சிறைக்குச் சென்றபோது அவருக்கு 33 வயது அவர் தற்போது 77 வயதில் வீடு திரும்பியுள்ளார்.