ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இவ்வளவு கெடுபிடிகளா? சாந்தனின் சகோதரர் ஆதங்கம்!

0
87

ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இந்த ஆவணங்களுடனும் அதிகாரிகளுடனும் போராட வேண்டியுள்ளதாக தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் சகோதரர் மதிசுதா தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

ராஜீகாந்தி கொலை வழக்கில் கைதாகி 32 ஆணடுகள் சிறவாசம் அனுபவித்த ஈழ தமிழரான சாந்தன் விடுதலை செய்யபட்டிருந்த நிலையில் தாயகம் திரும்ப காத்திருந்தபோது உலநலக்குறைவால் கடந்த 28 ஆம் திகதி சென்னையில் காலமானார்.

அதிகாரிகள் அசமந்தம்

இந்நிலையில் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் நேற்றையதினம் (மார்ச்1) நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட சாந்தனின் உடலை பொறுப்பேற்க வேண்டியவரது சகல ஆவணங்களுடன் மைத்துனர் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

ஆனால் Air bill இல் பெற வேண்டிய பெயரில் இறந்தவரின் பெயரை அதிகாரிகள் போட்டு விட்டதால் அவரே வந்தால் தான் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டதாக சாந்தனின் சகோதரர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது அந்த பற்றுச் சீட்டை மீள் திருத்துவதற்காக 4 மணித்தியாலமாக விமான நிலையத்தில் தாம் போராடிக் கொண்டிருந்ததாகவும் ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட எவ்வளவு போராட வேண்டியுள்ளதாக அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சாந்தனை காண அவரது தாயார் ஆவலாக காத்திருந்த வேளை இந்திய இலங்கை அரசாங்கங்களின் கூட்டுச்சதியால் கடைசிவரை தனது தாயாரை காணாமலே சாந்தன் உயிரிழந்தமை ஈழதமிழ் மக்களின் மனங்களை பெரிதும் புண்படுத்தியுள்ளது.