மாரடைப்பால் பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் உயிரிழப்பு

0
94

பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ரிச்சர்ட் லூயிஸ் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ரிச்சர்ட் லூயிஸ் உயிரிழந்துள்ளார்.

ரிச்சர்ட் லூயிஸ்

1947 ஆம் ஆண்டு ப்ரூக்லினில் பிறந்தவர் ரிச்சர்ட் லூயிஸ். நியூயார்க்கில் இருக்கும் பல்வேறு கிளப்களில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்திய ரிச்சர்ட் லூயிஸ் காமெடி நிகழ்ச்சிகளின் வழியாக திரையில் அறிமுகமானார்.

பின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கிய இவர் ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக மாறினார்.