ஏமாற்றப்படும் ஈழ தேசம்; சாந்தனின் உயிரிழப்பு இரு நாட்டு அரசியலா?

0
91

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்பட்டு தண்டிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் மரணமானது அரசியல் படுகொலை எனப் பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

அரசியல் காய்நகர்த்தலுக்காக ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களை வைத்து தொடர்ந்தும் இந்தியா அரசியல் செய்துவருவதாகவும் தமிழக மற்றும் ஈழ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை செய்யாதவர்களை பா.ஜ.க, அரசாங்கம் விடுதலை செய்து தமிழகத்தில் தம்மை நிலைநிறுத்த முற்றப்பட்டது. ஆனாலும் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களை

முழுமையாக விட்டுவிட விரும்பவும் இல்லை. அதிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் விடயத்தில் இந்திய அரசு மேத்தனப் போக்கையே கடைப்பிடித்திருந்தது.

இந்திய தேர்தல் பிரசாரம்

சாந்தன் இலங்கைக்கு திரும்பினால் அதனை வைத்து காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ.கவை நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தாக்குவார்கள் என்பது மோடிக்கு தெரிந்த அரசியல். இத்தகைய பின்னணியில் சாந்தன் நாடுதிரும்பினால் மோடி அரசாங்கத்திற்கு பின்னடைவையும் ஏற்படுத்தலாம்.

இதேவேளை இலங்கையும் சாந்தன் நாடுதிரும்புவதை விரும்பாது. அதுவும் அவர்களின் பேரினவாத சிந்தனைக்கு ஏற்காது. ஒரு நாட்டின் தலைவரின் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் உயிருடன் நாடு திரும்பி குடும்பத்துடன் இணைந்து வாழ்வதை சாந்தன் விடயத்தில் இரு நாடுகளும் விரும்பியிருக்காது என்றே அரசியல் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

அந்த வகையில் சாந்தனை நாடுக்கு அனுப்புவதாக கூறிக்கொண்டாலும், அவரை உயிருடன் அனுப்புவதில் பெரிதாக இந்திய அரசு விரும்பவில்லை.

அவ்வாறு சாந்தன் நாடு திரும்பும் போது அவரை ஊடகங்கள் கொண்டாடும். மிகப்பெரிய வரவேற்பும், ஊடக அவதானிப்புக்களும் ஏற்படும் என்பதும் தென்னிலங்கைத் தெரிந்த உண்மை.

இதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆகவே உயிருடன் சாந்தன் நாடு திரும்புவது என்பது இரு நாட்டுக்கும் ஏதோ ஒரு வகையில் எரிச்சலையும், வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பது கணிப்பு.

ஆக இதனைத் தவிர்க்கும் வகையில் சாந்தன் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது ஊடக மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பாகும்.