நாட்டின் இரகசியங்களை வெளிநாட்டுக்கு வழங்கிய முன்னாள் அரசியல்வாதி: அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சை

0
110

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டுக்கு வழங்கியதாக அந்நாட்டின் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் மார்க் பர்கஸ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு துரோகம் செய்த அந்த முன்னாள் அரசியல்வாதியின் பெயரை வெளியிட வேண்டும் என கோரிக்கைகன் விடுக்கப்பட்டுள்ளன.

வேறு ஒரு நாட்டை சேர்ந்த உளவாளி ஒருவர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியை தனக்கு சார்பானவராக மாற்றி நாட்டின் இரகசிய தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய புலனாய்வுத்துறை பணிப்பாளர் நேற்று கேன்பராவில் தெரிவித்திருந்தார்.எனினும் அந்த உளவாளி எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

நாட்டுக்கு துரோகம் செய்த முன்னாள் அரசியல்வாதி-ஆஸி,புலனாய்வுத்துறை

சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கத்தின் நலன்களுக்காக முன்னாள் அரசியல்வாதி, தமது நாடு, கட்சி, தனது சக அரசியல்வாதிகளுக்கு துரோகம் செய்துள்ளதாக அவுஸ்திரேலிய புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் பெரும் பரப்பப்பும், சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா அல்லது வடகொரியா ஆகிய நாடுகளில் ஒன்றுக்கு குறித்த முன்னாள் அரசியல்வாதி இரகசிய தகவல்களை வழங்கி இருக்கலாம் என பேசப்படுகிறது.

இதனால் இரகசியங்களை வழங்கிய முன்னாள் அரசியல்வாதி மற்றும் இரகசியங்கள் பெற்றுக்கொண்ட நாடு தொடர்பான தகவலை வெளியிட வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.