அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; மிசெல் ஒபாமாவை விரும்பும் மக்கள்!

0
115

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையான ஜனநாயக கட்சியினர் கருதுவதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மிசெல் ஒபாமா டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விரும்புகின்றனர்.

ஜனநாயக கட்சியினர் விருப்பம்

அதேசமயம் வரும் நவம்பர் தேர்தலிற்கு முன்னர் ஜோபைடனிற்கு பதில் கட்சி வேறு ஒரு வேட்பாளரை நியமிப்பதற்கு 48 வீதமான ஜனநாயக கட்சியினர் ஆதரவளித்துள்ள அதேவேளை 38 வீதமானவர்கள் இதனை நிராகரித்துள்ளனர்.

இதேவேளை இந்த தருணத்தில் அவ்வாறான ஒரு விடயம் இடம்பெறலாம் என 33 வீதமான வாக்காளர்களே நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பைடனிற்கு பதில் யார் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பது குறித்து ஜனநாயகட்சியினர் மத்தியில் பொதுக்கருத்து காணப்படாத போதிலும் 20 வீதமானவர்கள் மிசெல் ஒபாமாவை குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை ஹமாலா ஹாரிஸ் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் துணைவியாருக்கு அதிகளவு ஆதரவு காணப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.