ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கை செவ்விளநீர் 2000 ரூபாவிற்கு விற்பனை!

0
85

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும் மேலும் பல நாடுகளில் இருந்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிர்

அதேவேளை இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிராகும், பல நாடுகள் இளநீர் பயிரிட முயன்றாலும், இலங்கையில் இளநீர் போன்று அதிக சுவை இல்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதன் காரணமாக உள்நாட்டு இளநீருக்கு உலகச் சந்தையில் இலங்கையின் ஏகபோக உரிமை இன்னும் உள்ளது. இந்த சூழ்நிலையில் இருந்து அதிகபட்ச இளநீரை அறுவடை செய்வதற்காக, குறிப்பாக முருதவெல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக ரலுவ கிராமம் நிறுவப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விவசாயிகளுக்கு 1,600 இளநீர் கன்றுகளை நேற்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர வழங்கி வைத்தார்.